உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

43


அதே சமயத்தில், உடற்பயிற்சி எப்பொழுது செய்யலாம் என்று நேரம் குறித்துக் காட்டியதுடன், மசாஜ் பயிற்சி களுக்குரிய நேரத்தையும் கூறினார்.

கடுமையான பயிற்சிகள் பற்றி, இவர் மிகவும் கடுமையாகவே சாடியிருக்கிறார்.

எதற்கும் அளவு வேண்டும். உடற் பயிற்சிகளுக்கும் ஓர் அளவு வேண்டும். அளவுக்கு மேல் கடுமையான உடற் பயிற்சிகள், அளவுக்குமேல் உணவு உண்ணுதல்; அதிகமான நேரம் உறங்குதல், இது மனித வாழ்க்கை முறையல்ல. பன்றிகள் வாழ்வது போன்ற வாழ்வு முறை என்றார்.

இத்தகைய அளவற்ற பயிற்சிகள் செய்பவர்களை, நடுத்தர வயதிலேயே இவை மரித்துப் போகச் செய்கின்றன. முதுமையில் பலர் வாழ்ந்தாலும், அவர்கள் முடங்கிப் போனவர்களாக, முற்றிலும் பயன்படாதவர்களாகவே வாழச் செய்கின்றது. இளமையில் அழகான உடல் கொண்டி ருந்தாலும், அதிகப் பயிற்சிகள் முதுமையில் அவர்களை தடித்தவர்களாக, வீங்கிப் போனவர்களாக மாற்றிவிடுகிறது.

ஆகவே, எளிமையான பயிற்சிகளைச் செய்யுங்கள், இளமை காலத்தில் வாழ்வது போல, முதுமைக் காலத்திலும் முழு வாழ்வு வாழுங்கள். அளவோடு செய்யுங்கள், நேரத்தில் செய்து நிறை வாழ்வு வாழுங்கள் என்று கேலன் தனது மருத்துவ அறிவுடன், மரபு நெறிகளை மாற்றிடும் கொள்கைதமை வற்புறுத்தினார்.

கிரேக்க நாட்டில் உடற்கல்வி

கிரேக்கர்கள் கல்விக்காக நிறைய காரியம் ஆற்றியிருக்கிறார்கள். உடற்கல்விக்கோ உன்னதமான சேவைகள் புரிந்திருக்கின்றார்கள்.