உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தலை சிறந்த கிரேக்கத் தத்துவ ஞானிகளும், சிந்தனையாளர்களும், ஆண்களும் பெண்களும் கட்டாயமாக உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கையை லட்சியமாகக் கொண்டு, வற்புறத்தி நாட்டிலே அரங்கேற்றி வைத்தார்கள்.

மனமும், உடல் ஆத்மாவும் வலிமையுடன் விளங்க வேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உறுதுணையானவை. ஆகவே, மூன்றையும் முழு மூச்சாக வளர்க்க வேண்டும். என்கிற சிந்தனையை செயல்படுத்தத் தூண்டினர்.

உடலுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள். அறிவுக்கு இலக்கணமும் இலக்கியமும். ஆத்மாவுக்கு-இசை என்றும் வரன் முறை செய்து காட்டினர்.

அவர்கள் காலத்திலே மசாஜ் முறை, மருத்துவ ஜிம்னாஸ்டிக் பயிற்சி முறை எல்லாம் மக்களிடையே பிரபல மாகியிருந்தன.

உடலுக்கு பலம் மட்டுமல்ல, உருவத்தில் தரம் ஏறிய அமைப்பு, அழகான அமைப்பு இருக்க வேண்டும். என்பதற் காகப் பயிற்சிகள் செய்திட வேண்டும் என்ற சித்தாந்தம் இவர்கள் காலத்தில் செழிப்படைந்தது.

ஒரு மனிதன் எல்லாவகையிலும் வல்லமை உடையவனாக விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், விளையாட்டுப் போட்டிகளில் பென்டாதலான் எனும் ஐந்து போட்டிநிகழ்ச்சிகளை உருவாக்கி, அனைவரையும் பங்கேற்க வைத்தனர்.

ஓடுவது, தாண்டுவது, தட்டெறிவது, வேலெறிவது, மல்யுத்தம் போன்ற ஐந்து போட்டிகளுக்கும் உடலாண்மை மிக இன்றியமையாத தேவையல்லவா! இவை உடலுக்கு உள்ளே