உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

45


உள்ள விரைவையும், உடலில் வலிமையையும், களைப் படையா உழைப்பின் மேன்மையையும், உடலுறுப்புக்களின் ஒன்று பட்ட செயலூக்கத்தையும், உடல் நெகிழ்ச்சியின் ஒப்பிலா தகுதியையும் அல்லவா வேண்டுகின்றன! விரும்பி வளர்க்கின்றன.

ஆக, கிரேக்கர்கள் காலம் மாறி வர வர, தாங்கள் கொண்டிருந்த கொள்கையிலும் எழுச்சி மிக்கவர்களாக மாறி வந்ததுடன், மெருகேறி மேன்மை மிக்க அறிவுடைய செயல் வீரர்களாகவும் மாறி வாழ்ந்தனர். என்றாலும் அவர்கள் வீழ்ச்சி ஏன் அவ்வளவு விரைவாக வந்தது என்பதையும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

கொள்கையாக இருந்த உடற்திறப் போட்டிகளில், பணக்கார விளையாட்டுத்தனம் புகுந்தது. விழாக்கால விளையாட்டுக்களில் உண்மையான உடற்பயிற்சியாளர்கள் பங்கு பெற முடியாதவாறு, பணக்காரர்களின் கூலி பெற்ற ஆட்கள் பங்கு பெற்றனர்.

அத்தகைய நடவடிக்கை விளையாட்டுக்களில் வீரத்தைக் காட்டவில்லை. வியாபாரமாக்கிக் காட்டியது.

சிந்தனையாளர்கள் செய்த சமுதாய மாற்றத்தால், உடற்கல்வியானது தனிப்பட்ட மக்களின் நல்ல பழக்க வழக்கங்கள், வீரம், போரிடும் ஆற்றல் இவற்றை வளர்க்க முனைந்தது. அத்துடன், மக்களின் ஆசாபாசங்களை அகற்றவும் உதவியது.

பயிற்சி தரும் பாலஸ்டிரா பள்ளியில், இசைப் பள்ளி களில் முறையான உடற்கல்வி இடம் பெறாமல் போயின. பொதுப் பயிற்சியிடங்களுக்குப் போதிய மக்கள் வருகை குறைந்தது. இன்பந்தரும் விஷயங்களையே கற்றுத்தரும்

இடமாக எல்லாம் மாறின.