இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
எங்கள் நாடு
மல்லியொடு முல்லைமலர் மணங்கமழும் நாடு ;
அல்லியொடு தாமரையின் அழகுமிகும் நாடு.
பள்ளர்களும் மள்ளர்களும் பண்மிழற்றும் நாடு ;
வள்ளல்களும் வீரர்களும் வாழ்ந்திருந்த நாடு.
கைத்தொழிலும் வாணிபமும் கற்றறிந்த நாடு ;
வித்தையினில் வல்லவர்கள் வீற்றிருந்த நாடு.
அவ்வைதிரு வள்ளுவர்நல் லறம்உரைத்த நாடு;
எவ்வெவரும் போற்றுகின்ற எங்கள் தமிழ் நாடே.