உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே பத்திரிகைகளை கவனித்து வருபவன் என்ற தன்மையில், பத்திரிகைத் துறை சம்பந்தமான சில தகவல்களையும் தான் உணர்ந்த உண்மைகளையும் எடுத்துச் சொல்கிறேன்.

‘ஊருக்கு நல்லது சொல்வேன்; உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்ற வாக்கு தான் என் நோக்கும் ஆகும்.


2


த்திரிகைகளின் போக்குகள் பற்றி சிந்திப்பதற்கு வசதியாக ஒரு கால வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம்–

1947க்கு முன்பும் 1947 க்குப் பின்னரும்.

அதாவது, நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் - சுதந்திரம் - பெற்ற பிறகும்.

இக்கால வரம்புக்கு முன்னரும் பின்னரும், பத்திரிகைகளின் போக்கிலும் வளர்ச்சியிலும், பளீரெனப் புலனாகிற வித்தியாசங்கள் இருப்பதால், இந்தப் பிரிவு பொருத்தமானதாகவும் அமைகிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால், மக்களுக்கும், அவர்களை வழி நடத்திச் செல்ல முனைந்த தலைவர்களுக்கும், அவர்கள் காட்டிய வழியில் செயலாற்றத் துணிந்த பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும்