13
‘மணிக்கொடியின் ஆழ்ந்த இலக்கிய நோக்கையும் விகடனின் மேலோட்டமான இலக்கியப் போக்கையும் இணைக்கும் ஒரு முயற்சி போல - ஒரு மிதவாதத் தன்மையுடன் செயல்பட்டு வந்தது, 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட கலைமகள்' மாதப் பத்திரிகை.
கலைமகளின் ஆரம்ப வருடங்களில், ரொம்பப் 'பெரிய மனிதர்' களின் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. மகாமகோ பாத்தியாய உ. வே. சாமிநாதய்யர் தமது அனுபவங்களே இனிய எளிய தமிழில் சுவையான கட்டுரைகளாக எழுதினர். "மணிக்கொடி" நின்ற பிறகு அதன் படைப்பாளிகள் தங்கள் திறமையைக் காட்டுவதற்கு உரிய களமாக அமைந்தது கலைமகள் தான். விகடனில் எழுதும் எழுத்தாளர்களும் அதில் எழுதினர்கள். மொழி பெயர்ப்புக்கும் அது நிறையவே தன் பங்கை ஆற்றியுள்ளது-1947க்கு முன்பு.
தாராசங்கர் பானர்ஜி, பங்கிம் சந்திரர், பிரேம் சந்த் முதலிய இந்திய மொழி நாவல்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள பெருமை கலைமகளுக்கு உண்டு.
'ஆனந்த விகடன்' வெற்றிகரமாக வளரவும், அதைப் பின்பற்றிப் பல விகடன்கள் தோன்றின. பிரசண்ட விகடன், குமார விகடன் முக்கியமானவை.
நாரணதுரைககண்ணன் பிரசண்டவிகடன், ஆசிரியராக இருந்தார். விறுவிறுப்பான முறையில், அவர் பல விஷயங்கள் குறித்தும் விமர்சன ரீதியில் கட்டுரைகள் எழுதினர். வாசகர்களை ஈர்க்கும் தொடர்கதைகளாக அநேக நாவல்கள் எழுதினார். (நான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?, இவ்வுலகை திரும்பி பாரேன், சீமாட்டி கார்த்தியாயினி, தாசிரமணி, உயிரோவியம் முதலியன. ஜீவா என்பது அவர் புனைபெயர்.)