பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 7

ஒளிவளர் விளக்கே என்றது, இறைவன் அறிவுருவாகி கிற்கும் சித்துப் பொருள் என்பதைப் புலப்படுத்தியது. உலப்பிலா ஒன்றே என்றது, அழியாமல் கித்தியமாக கிற் கும் சத்துப் பொருள் என்பதைக் குறிப்பித்தது. உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே என்றது, அவன் பிற நுகர்ச்சி களின் எல்லேயைக் கடந்த அநுபவமாகிய ஆனந்தப் பொருள் என்பதைத் தெளிய வைக்கிறது. சச்சிதானந்தப் பரம்பொருளே என்று கூறுவதையே வேறு வகையில் திருமாளிகைத் தேவர் சொல்கிரு.ர்.

ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

இறைவனுக்குத் தனியே இன்னதென்று சுட்டிக் காட்டும் உருவம் ஒன்றும் இல்லை. ஆலுைம் அவன் பல திருக்கோலங்களில் தன்னே வழிபடும் அன்பர்களுக்கு அருள் செய்கிருன். அந்த உருவங்கள் வழிபடுபவர்களுடைய மன இயல்புக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன. இறை வன் தாயய்ைச் சூன்யப் பொருளாய்ப் பளிங்குபோல இருக்கிருன் தெளிவாக உள்ள பளிங்கு மலையாக இருக் கிருன். தனக்கு முன் சிற்பவன் எந்தக் கோலத்தோடு கிற் கிருனே அந்தக் கோலத்தைப் பளிங்கு காட்டும். பளிங் குக்கு கிறம் இல்லை. தன்முன் இருக்கும் பொருளின் கிறத்தை அது காட்டும். இறைவன் தன்னை வழிபடும் அடியவர்களுடைய விருப்பப்படி யெல்லாம் கோலங் கொண்டு அருள் தருவான். வழிபடும் அன்பர்களுக்கு இன்பந்தரக் கொண்ட கோலமேயன்றித் தனக்காகக் கொண்டவை அல்ல அவை. அவன் சுத்த சிவம். தெளிந்த பளிங்கு போன்றவன். தனக்கென்று குணமோ குறியோ இல்லாதவன். அன்பினலே தன்னே அணுகுவாருடைய