உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பொறுக்காது. ஆகவே, விஷயம் மர்மமாகவே வளர்ந்தது. அவளுக்குக் கல்யாணமான மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பமாகி விட்டது மதனவிழா அரங்கேற்றம்!

கல்யாணம் என்பது ஒருவகையில் பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து விடுகிற லைசென்ஸ் என்றே சொல்லாம் வயிற்றிலே பாரம் வந்து விடும் என்று கன்னி கலங்க வேண்டி யிருக்கும். மணமான மங்கை கவலைப்பட வேண்டாமல்லவா. கணவன் பெயர் ஒரு ‘பாஸ்போர்ட்’ அவளுக்கு!

கனவனுக்கென்ன!

பண்ணையார் இஷ்டம் போல் அலைய சகல வசதிகளும் இருந்தன. குடிப்பார். கூத்தடிப்பார் தேவடியாள்களுடன், பண்ணையாருக்கு மனைவியில்லை, வீட்டுக்கு லக்ஷ்மியாக எஜமானியில்லை என்றால் சமூகத்தின் கண்களிலே அது ஒரு குறை. அதை தவிர்க்க அவரிடம் பணம் இருந்தது. சிவகாமி வந்து சேர்ந்தாள், குல விளக்காக, அப்புறம் சமூகம் குருடு தானே! குல விளக்கு கரண்டு போவதை அது ஏன் கவனிக்கப் போகிறது; பண்ணையார் கண்டபடி அலைவதை அது ஏன் தடுக்க வேண்டும். அவர் ஊருக்குப் பெரியதனக்காரர். அவர் இஷ்டம்போல் செய்யலாம்.

கல்யாணம் செய்து கொண்ட புதிதில் பண்ணையாருக்கு அந்தக் கனி இனித்தது. இல்லை, இனிப்பது போலிருந்தது. பிறகு, நாளாக ஆக சிவகாமி பழுக்காத கனி, பிஞ்சிலேயே வெம்பிப் போனது என எண்ணிவிட்டார் அவர், அவருக்கு விருந்தளிக்க அனுபவஸ்தர்களுக்குக் குறைவா! அனுபவமுற்ற அடுத்த வீட்டு அலமேலு, தாசி குஞ்சரம்,