வ.உ.சிதம்பரம்
17
வள்ளியம்மை, ‘துறவிக்கு சாதி ஏது?’ என்று எவ்வாறு கேட்டாரோ அதே பண்புடன் மீனாட்சியும், சிதம்பரமும், மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு என்ற சாதி மனப்பான்மையை வெறுத்து, கடவுள் படைப்பிலே எல்லாரும் சமமே, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தமிழ்த் தத்துவ நெறிக்கேற்றவாறு வாழ்ந்து வந்தார்கள்.
சிதம்பரம் சில மாதங்கள் சென்னை மாநகரில் வசிக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது சென்னையில் ரிப்பன் அச்சுக்கூடம் என்ற ஓர் அச்சகம் புகழ் வாய்ந்த பெயருடன் இருந்தது. அங்கே, தமிழ் சம்பந்தப்பட்ட பல அறிவாளர்களும், அரசியல் தொடர்புடைய சிலரும் அடிக்கடி வந்து போகும் அச்சகம் அது.
ஒரு நாள் அந்த அச்சகத்துக்கு சிதம்பரனார் சென்றார். அங்கே சகஜானந்தர் என்ற ஒருவர் இருந்தார், வ.உ.சி. அவரை அணுகி ‘நீர் என்ன சாதியோ? என்றார். உடனே அந்த சகஜானந்தர், ‘ஐயா நான் நந்தனார் வகுப்புப் பிள்ளை’ என்றார்.
உடனே சிதம்பரனார் அவரது இரு கைகளையும் இறுகப் பற்றி, நீர் உண்மையை ஒளிக்காமல் கூறியதால், ‘நீர் தான் உண்மையான அந்தணர்’ என்று மகிழ்ந்து அவரை அனைத்துக் கொண்டு ஆரவாரம் செய்தார். சகஜானந்தரைத் தனது ஊருக்கு உடன் அழைத்து வந்தார். மனைவியை உணவளிக்குமாறு கூறி, அவரின் விவரத்தை மனையாளுக்குத் தெரிவித்தார்.
நாள்தோறும் சகஜானந்தருக்கு சிதம்பரனார் திருக்குறள் போன்ற சிறந்த நூல்களை எல்லாம் கற்பித்தார் அப்போதெல்லாம் தூத்துக்குடியிலே உள்ளவர்களில் சில