18
கப்பலோட்டிய தமிழன்
தமிழார்வம் கொண்டவர்கள், தினந்தோறும் அவரது வீட்டுக்கு வந்து தமிழ் நூற்களை இலக்கண இலக்கிய உணர்வுகளோடு கற்று வந்தார்கள். இதுபோல தமிழ்ப் பாடங்களைப் பலர் சிதம்பரனாரிடம் படித்தார்கள்.
தமிழ்க் கல்வியைச் சிதம்பரனார் பிறருக்குப் போதிக்கும் போது ஒரு நிபந்தனையை விதிப்பார் விதிப்பார் என்றால் அது உதட்டளவில் அல்ல; உணர்வளவில் செயலளவில் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்.
என்ன அந்த விதி என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. முதல் நாள் கற்க வந்தவர்களுக்கு என்ன பாடத்தைச் சிதம்பரனார் கற்றுத் தருவாரோ, அதை அப்படியே பொருள் புரிந்து, மறுநாள் எழுத்துத் தவறாமல் ஒப்புவிக்க வேண்டும். அவ்வாறு, மனனம் செய்யாதவர்களுக்கு மறுநாள் வேறுபாடத்தை நடத்தவே மாட்டார். இதுதான், சிதம்பரனாரின் கல்விச் சித்தாந்தம்.
இதனை அறிந்த ராஜாஜி, சிதம்பரனாரிடம் திருக்குறள் பாடம் பெற வேண்டும் என்று விரும்பினார். சிதம்பரனார் சென்னை வந்து சில மாதங்கள் தங்கும் வாய்ப்புப் பெற்றிருந்த போது, இராஜாஜி வ.உ.சி.யிடம் சென்று தனக்குத் திருக்குறள் பாடம் பயிற்சித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தனது கல்விச் சித்தாந்தத்தின் விதியை சிதம்பரனார் விளக்கிக் கூறினார். ராஜாஜி அதைச் சரியென ஏற்றார். ஆனால், சிதம்பரனார் சித்தாந்தத்தின் படி நடக்க ராஜாஜிக்குப் போதிய கால வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் வேறு பாடம் பயிற்சித் தர அவர் மறுத்து விட்டார். இதைக் கண்ட ராஜாஜி, ஐயா சிதம்பரம், எனக்குப் பாடம் சொல்லித் தரும்