உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●ラ@の2eタ ダ@2ó 之うぬ2多

காண்க: "நாரத்தங் காயின் நடுநார்போல் மேனியெங்கும் தொங்கும் பழுத்த மயிர்த்திரளும்” (42-143) உவமை கூறலில் வல்லிய ஆண்மையர் அவர்.

“கல்லார் மனம்போல் கருமையிருள்! அவ்விருளில் பொல்லார் மனம்போல் புதைகுழியும் முட்புதரும்!”

- . (887-888)

என்றவாறு இந்நூலுள் வரும் அவரின் சிறந்த வரிச் செய்திகள் பலவும் இவ் வகையில் எண்ணியுணர்ந்து இன்புறத் தக்கன!

உவமை கூறப் புகுந்தவிடத்து - ஒன்றன்மேல் ஒன்றாக உவமைகளை அடுக்கம் வைத்து ஏற்றி அணி செய்யும் திறத்தில் - ஐயா அவர்கள் நிகரற்றவர் என்பதற்குக் கீழ்வரும் ஒருவரி ஓர் ஒப்பற்ற சான்று. இறந்துபோன கழுதையின் கணவனைப் பற்றி, அதனிடம் அங்கு வந்த காளை நினைவூட்டுகின்றது; "கணவன்" என்னும் அச் சொல்லைக் கேட்ட மாத்திரத் திலேயே கழுதைக்கு உடலெல்லாம் சிலிர்சிலிர்ப்பு; துடும் என மயங்கி விழுந்துவிடுகின்றது! அவவிடத்தில் - கழுதை விழுந்த செய்தி குறித்துப் பாவியத்துள் இவ்வாறு உவமையடுக்கம் புரிகின்றார், ஆசிரியர்! அவரின் அவ் வகை வியல்திறத்தையேற்ற ஓர் ஏற்றக் காட்சி, இது.

"மின்சாரம் பாய்ந்ததுபோல், மேனி சிலிர்சிலிர்க்க,

மண்சார மற்ற மரமற்று வீழ்வதுபோல், பொத்தென்று கீழே பொதிபோல் விழுந்ததுவே"

(287-289)

-உ0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/21&oldid=665330" இலிருந்து மீள்விக்கப்பட்டது