உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கழுதை அழுத கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●ラの422タ 学(22う 芝の2空

"مس.

என்றவாறு வரும் தாய்க்கழுதைக் கூற்றுவழியாக - இம் மாந்தரைத் திருத்தி நிறுத்த அறிவர் பல்லோர் முன்பு பட்ட பாடுகளை நீளநினைந்து ஏக்கத்தோடு பதிவு செய்திருப்பதை இவ்விடத்தில் நாம் கருதிப் பார்த்தல் வேண்டும்.

மாந்தர் என்னும் சொல் - “மைந்து” என்னும் வலிமைக் கருத்து அடிப்படையிலாக - மைந்து > மந்து > மாந்து > மாந்து > அா > மாந்தர் =) வலிமையுடையோர் என்னும் பொருட்பாட்டைக் கொண்டதாகும். (ஒ.நோ: 1 மைந்து > மைஞ்சு > மஞ்சு.

(மேலுங்காண்க: ஐந்து > ஐஞ்சு > அஞ்சு)

(பேச்சு வழக்கு) (மஞ்சு வலிமை, > வலிமையுடைய காளை)

(ஒ.நோ. மஞ்சு வெருட்டு = காளை வெருட்ட

லாகிய (விரட்டல்) மற விளையாட்டு) மாந்தர்க்கு இயல்பாய் அமைந்திருக்க வேண்டிய மனநேயமே அற்று - , வெற்றுப் புலன் வாழ்க்கை வாழும் விலங்குகளாக - வெறுமனே தின்னும்வாழ்வில் திளைக்கும் கொடிய ஊண்மாக்களாக இவர்கள் விளங்குகின்றார்கள் என்னும் குறிப்புத் தோன்றுமுகமாக - மாந்தர் எனும் சொல்லாக்கத்திற்கு "மாந்துதல்” என்னும் நிரம் பவுண்ணுகை க் காரணத்தை (விளையாட்டான வேர்ச்சொல் காட்டும் பதிவு முறையிலாக-) மொழியியலர் இதனை நகையாட்டுச் சொல்லியல் - முறை, என்பர்) வேண்டுமென்றே வலியப் புணர்த்தி, - குட்டிக் கழுதைக் கூற்றாக

-உஅ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/29&oldid=665350" இலிருந்து மீள்விக்கப்பட்டது