の@の22ラ ダ@2多 の 22タ
பொல்லாப் பகுப்புகள் இலவே' என்னும் கருத்தை இக் கதைப் பாவியத் தலைவியாகிய தாய்க்கழுதை மற்ற விலங்குகளிடம் விளக்கியுரைத்து எள்ளுவதாக அமைத்துள்ள பாங்கும் - மிக அருமை சான்றது! அவை, இவைl.
1. "மக்களென்பார் தங்களையே மாய்த்துவிடும் காலமிது! ஒக்க அவரினத்துள் ஒற்றுமைக்கு வாய்ப்பில்லை! கோடிக் குலம் பகுப்பார்; கோடி மதம் வகுப்பார்!
(450-452)
2. "எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்று கற்றிர்
கல்லாத எங்களுக்குள் காணாத வேற்றுமைகள் பொல்லாக் குலச்சண்டை போட்டுடைத்துக் கொள்கின்றீர்!" - (1277-1279) எல்லாம் அவரால்தாம். எவரால்!!. பார்ப்பாரால்!.)
ஆரியர் வருமுன் வெறுமனே - தொழிற்குலங்களாக மட்டும் பிரிவுற்று இன அடிப்படையில் இயல்பாக மனம் ஒன்றியிருந்த இத் தமிழினம் - அன்னார் காலடி யெடுத்து வைத்த காலந்தொட்டு, மேல்கீழ் என்னும் கீழ்மைப் பகுப்புகளைப் பற்றிக் கொண்டு பாறுமயிர்ச் சிதறலாகக் குலைவுற்றுக் கிடக்கின்றமையை வரலாற்று அடிப்படையில் உணர்ந்திருந்த பாவலரேறு ஐயா அவர்கள்-சிறார்க்கான இப் பாவியத்துள் அன்னாரையும் - அவர்களின் கீழ்மை நிலைகளார்ந்த செயன்முறைக ளையும் நம் தமிழ்ப் பிஞ்சுகள் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் உள்நோக்கத்துடனேயே மிக அருமையுற அமைத்திருக்கின்றார்! தாய்க் கழுதைக் கூற்று. இது!
متيمنتس ينتقسيس.