பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன ஆச்சரியும்? 3, முடியாதென்று. வீட்டிற்கு முன்னலுள்ள பந்தல் வரையிலும் ஒடி ஆங்கு நின்றுகொண்டு " இதைச் சாப்பிடு' என்ற உத்திரவுக்குப் பதிலுத்தரமாக 'கான் மாட்டேன் ” என்று கூறுகிருள். இப்படிச் செல்வமாக வளர்க்கப்படுகிருள் அச்சிறுமி. அவள் அக்கம்பக்கத்து வீட்டுச் சிறு பெண்களுடன் சேர்ந்துகொண்டு மண் ளுல் செய்த பாவைக்குப் பூச்சூட்டிப் பெண்ணுகப் பாவித்து விளையாடுவாள். சில சமயம் ஆண் பிள்ளை களுடன் கைகோத்து விளையாடுவதும் உண்டு. கண்ட பண்டங்களே வாங்கித்தரும்படி கச்சு செய்வதைச் சொல்ல முடியாது. வாங்கிக் கொடுக்காவிட்டால் தெரு முழுதும் கேட்கும்படி ஏங்கியழுவாள். மகிழ்ச்சி வந்தால் பத்து வீடுகள் வரை கேட்கும்படி அடங்காச் சிரிப்பு சிரிப்பாள். ஆண்டுகள் பல செல்லுகின்றன. சிறுமியின் விளையாட்டுகளும் தொந்தரவுகளும் வரவரக் குறை கின்றன ; நாளடைவில் அவை பொய்களாய்ப் பழங் கதைகளாய்க் கனவுகளாய்ப் போகின்றன. அவளுக்கு மணப்பருவமும் வருகிறது. ஒரு மகனுக்கு வாழ்க்கைப் பட்டு அவனோடு வசிக்க நேரிடலாம் என்ற கருத்தைப் புகட்டும் சொற்கள் அன்னேயின் வாயிலிருந்து அடிக்கடிப் பிறக்கின்றன. விரைவில் அவளுக்குத் திருமணமும் முடிகிறது ; கணவன் வீட்டிற்கும் அனுப்பப்படுகிருள். அவளது மணுளனே சிறந்த கல்விமான் ; பெரிய குடும்பத்தில் பிறந்தவன் ; குணசீலன். அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/21&oldid=781624" இலிருந்து மீள்விக்கப்பட்டது