உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காணிக்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கள் உட்கார்ந்து பேசுகிறோம். பேசுவோம் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. சொன்னால்தானே எங்கள் கதை உங்களுக்குத் தெரியும்.

அவள் சொல்கிறாள் இதுதான் சிலை. பெண்ணை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு என்கிறாள். அதுமட்டும் அல்ல; முதல் முதல் பெண்ணுக்குப் பெருமை கொடுத்த முதல் தமிழ்க் காப்பியமும் சிலப்பதிகாரம்தான் என்று சொன்னாள். இதை அவள் விமரிசித்ததிலிருந்து தெரிந்து கொண்டேன். அவள் கண்ணகியைப் பாராட்டியதிலிருந்து அவள் ஒரு லட்சியப் பெண் என்பதை அவள் சொல்லாமல் சொல்லிவிட்டாள்.

நான் சிலபேர் அங்குப்போகும்போது இது கண்ணகி சிலை என்று காட்சிப் பொருளாகக் கண்டு செல்வதைப் பார்த்து இருக்கிறேன். அவள் அதைக் கருத்துப் பொருளாக என்னிடம் பேசினாள். அதுமுதல் கண்ணகியைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இது முதல் உருவகமாக எனக்குப்பட்டது.அதாவது பெண்மையின் உயர்வை அது பேசுகிறது.

அடுத்தது 'காந்தி-அவர் உண்மை மனிதர் மற்றவர்களுக்கு. எனக்கு அவர் உருவகமாகத்தான் தெரிந்தார். இந்த நாட்டில் வன்முறையை ஒழிக்க வேண்டும்; ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட வீரர் அவர். உண்மையின் இருப்பிடம்; பகைமை பாராட்டாத பண்பினர். இந்த இரண்டும் இந்த நாட்டுக்கு இப்பொழுது மிகவும் அவசியம் எனப் பட்டது. அவர் இந்தத் தேசத்துத் தந்தை. அவரிடம் இந்த மரியாதை எனக்கு ஏற்பட்டது. வாழ்க நீ எம்மான்' என்று ஏதோ உளறிக்கொண்டு இருப்பேன்.

“என்ன இது?” என்று கேட்பாள்.

"உங்களுக்குப் பாடத் தெரியுமா?"

"சீ பைத்தியம்! பாடறவர்களுக்குத்தான் பாடத் தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/11&oldid=1320674" இலிருந்து மீள்விக்கப்பட்டது