உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காணிக்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

போகட்டும். முழுப்பாட்டு எனக்குக் கவனத்துக்கு வர வில்லை. ஜெய்கணேஷ் பாடியது. ரொம்ப் உருக்கமான பாட்டு.

"உனக்கு இந்த வயசிலே?"

"ஏன் வருது?" என்று கேட்கிறீர்களா.

"அதுதான் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. சோகத்திலேதான் சங்கீதமே பிறக்குது” என்று சொன்னாள்.

"நம்ம நாட்டிலே ஏழைகளின் நிலையைச் சித்திரிக்கின்ற சோகம் அதுலே கலந்து இருக்கிறது” என்று மேலும் அவள் விளக்கம் தந்தாள்.

அதை விளக்குவதற்குப் பக்கத்தில் இருந்த மற்ருெரு சிலையைக் காட்டினாள்.

அதைப் பார்த்துச் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறாய்?"

“இது தொழிலாளியின் வெற்றி"

"அதற்குச் சிரிக்க வேண்டுமா?"

“கேலிச் சித்திரம்”

அதாவது என்றைக்கும் தொழிலாளி இப்படிக் கஷ்டப்படுவான் என்பது அவள் குறிபபிட்ட கருத்து என்பதை அவள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

“உன்னைப் பைத்தியம் என்று சொல்லத் தோன்றுகிறது" என்றேன்.

“ஏன்?"

“இது தொழிலாளியின் சிலை: படகோட்டிகளைச் சித்திரிக்கிறது" என்றேன். “கடற்கரையில் இருப்பதால்".

“அல்ல; இது தொழிலாளியை மட்டும் சித்திரிக்கவில்லை. இது உருவகம். அதாவது உழைப்புக்கு இந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/14&oldid=1321110" இலிருந்து மீள்விக்கப்பட்டது