உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காணிக்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

அவள் அப்பா சிலப்பதிகாரத்திலே ரொம்பவும் ஈடுபாடாம். அவருக்கு மாதவிதான் ரொம்பவும் பிடித்தவளாம்.

அதுசரி கோவலனுக்கே அவள்தான் ரொம்புவும் பிடித்திருந்தது.நெருங்கிய தொடர்பு. கதையே மாதவியின் காதலைத்தானே சொல்கிறது அவள் ‘கலைச் செல்வி’ என்பது அவள் அப்பாவின் மதிப்பீடாம்.

தன் மகளும் அதைப்போல ஆடல் பாடலிலே சிறக்க வேண்டும் என்று நினைத்துத்தான் அவரும் அந்தப் பெயரை வைத்தாராம். அதேபோலத்தான் அவளும் நேரம் போறதே தெரியாமல் ‘துச்சாதனன் துகில்’ வரை இருந்துவிட்டு வந்திருக்கிறாள்.

அவள் எவ்வளவோ பாடுபட்டாள். கோவலனோடு கடைசிவரை வாழமுடியாமல் போய்விட்டது. என் மாதவி அவளோடு இந்தத் தொடர்பு ஏற்படும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. அவள் பெயர் மாதவி என்று தெரிந்ததும் என் மனைவியைக் கண்ணகியாகப் பார்க்க முடிந்தது.

நான் படிக்காதவன்தான்; ஆனால் சுயசிந்தனை உடையவன். இதை முன்னமேயே சொல்லி இருக்கிறேன். அதனால்தான் எதையும் உடனே வேகமாக விவரிக்க முடியவில்லை. சில சமயம் கஷ்டப்படுகிறேன். சட்டென்று விஷயத்துக்கு வரமுடிவதில்லை.

முரளிக்கு மாதவி மேலே ரொம்பவும் பிரியம். அவன் தன் அம்மாவிடம் பழகுவதைவிட மாதவியிடம்தான் ஆசை; இது எல்லாம் பின்னாலேதான் தெரிந்தது. மாதவி மறுபடியும் என்னைச் சந்திக்க விரும்பினாள் என்று சொன்னேன்.

அங்கேதான் என் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடர்ந்தது என்று நினைக்கிறேன். முதல் சந்திப்பிலேயே

கா-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/38&oldid=1325552" இலிருந்து மீள்விக்கப்பட்டது