உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 strf}& terrf}&ßdo

கலப்பு மதம் ரகசிய திருமணம்

இளம் வயதின்ர் அல்லவா ஜென்னியும். மார்ச்சும்? எப்படியும் திருமணம் செய்து கொள்வது என்ற

மூடிவுக்கும் கவர்கள் இருவரும் ஓர் ஒப்பந்தத்தை அவர் களே செய்து கொண்டார்கள்!

தந்தையின் மனக்குழப்பத்தைப் புரிந்து கொன்ட மார்க்ஸ், தானே சம்பாதித்துக் குடும்பத்தை நடத்துகின்ற நல்ல நிலை உருவாகும் வரை, ஜென்னியைப் பலர் அறியத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.

அத்த கணக்கத்தோடு பெர்லின் பல்கலைக் கழகத்திலே கடிக்கச் சென்றுவிட்டார் மார்க்ஸ். அவர் கல்வி முடிய ஏழு ஆண்டுகள் ஆயிற்று. அதுவரை ஜென்னி காலத்திைiம் கணக்கிட்டவாறே அவள் காத்திருந்தாள். ஆனாலும் மார்க்ஸ் அடிக்கடி ஊர் திரும்புவதும், ஜென்னியோடு அள, வளாவுவதையும் கண்ட டிரியர் ஊர் குரல் எழுப்பியது! உலைவாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? காதலர் இருவரும் இந்த ஊராரின் முணுமுணுப்புப் பேச்சுக் களைப் பொருட்படுத்தவில்லை. மார்க்ஸ் முன்பை விடமிக அக்கறையோடு இரவு பகலாக முயன்று படித்து முடிதி தார்:

தத்துவம், சட்டம், வரலாறு, புவியியல், இலக்கியம்’ யோன்ற துறையிலே உள்ள பாடங்களை அவர் கற்ற போது, அவன் மனம் தத்துவப் படிப்பிலே மட்டும் தனி யொரு ஆர்வத்தை எழுப்பியது அதனால், அக்காலத்திலே புகழ் பெற்று விளங்கிய ஹெகல் என்ற தத்துவ ஞானியின் தத்துவங்களை ஆழ்ந்து கற்றார். மார்க்ஸ் ஹெகலின் மாணவர்

சட்டம் படித்துத் தன்னைப் போல் ஒரு புகழ் பெற்ற வழக்குரைஞரக வருவார் மார்க்ஸ் என்ற தந்தை நம்பினார்