உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 33

இதனால் அரசு கவி காணிப்பும், அதிகாரிகள் வேலு உார்க்கும் வேலையும் - நாளுக்கு நாள் அதிகமாகி, கன் காணிப்பு அதிகாரி ஒருவரையும் அரசு நியமித்தது. அவரு டைய மேற்பார்வை இல்லாமல் பத்திரிகையை வெளியிடக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ருஷ்யாவில் தடை பெறும் கயேச்சாதிராக ஆட்சி முறையைக் கண்டனம் செய்து மார்க்ஸ் பத்திரிகையை வெளியிட்டார். அப்போது ஜெர்மன் அரசுக்கும் ருஷ்ய அரசுக்கும்நட்புக் கூட்டணி இருந்ததால், ருஷ்யா வைக் கண்டித்து எழுதக் கூட்ாது என்று உத்தரவிட்டது,

அரசு நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுத்தான் பத்திரிகை வெளிவர வேண்டும் என்று ஜெர்மன் அரசு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறித்தது.

இந்த அரசு நிபந்தனையைத் தாக்கினறிந்தார் மாரிக்ஸ்: புத்திரிகை ஆசிரியர் பதவியிலே இருந்தும் விலகி விட்டார். இதைக் கண்ட பத்திரிகை பங்குதாரர்கள் மார்க்ஸ் ஏன் விலகினார் என்ற காரணத்தை அவரிடம் நேரிலேயே கேட் டார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு சட்ட சபைக்குச் செல்பவர்களின் கடமைகள் என்ன? என்பதை விளக்கி எழுதினேன்.

ஜெர்மன் அரசின் சுயேச்சாதிகார அக்ரமத்தையும், அதன் சுயரூபத்தையும் மக்களுக்குப் புரியுமாறு விளக்கி இருந்தேன். ஒரு பத்திரிகையின் நியாயமான கடமை எதுவோ அதைத்தான் எனது பத்திரிகையும் செய்தது.

அதற்காக ஒர் அரசு பத்திரிகையும் சுதந்திரத்தைப் பறிக்க; அதன் குரல் வளையை தனது அதிகாரத்தால் நெறிக்கும் போது என்னால் பார்த்துக் கொண்டிருக்கமுடிய வில்லை. அப்படிப்பட்ட பத்திரிகைக்கு ஆசிரியன்ாக இருப் அதை கம்மா இருப்பதே சுகம்' என்று கூறினான் மார்க்ஸ்: