இரண்டாவது அண்ணுச்சி கோமதிநாயகம் சென் இன யில் எபிஷியன் பப்ளிலிட்டீஸ் பி. லிமிடெட் கம்பெனி யில் மானேஜராக இருக்கிருர். அப்படி வருவதற்கு முன்பு மெடிகல் ஸ்டேசர், அச்சாபீஸ், சினிமா உல கம் பத்திரிகை துணை ஆசிரியர் என்று அநேக வேலை கள் பார்த்திருக்கிருர், அசோகன் என்ற புனே பெய சில் கதைகள் எழுதி இருக்கிருர். உலகத்து சிறுகதை கள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளார். மாக்சிம் கார்க்கியின் Lower Depths’ நாடகம் அசோகன் தமி ழாக்கமாக அதல பாதாளம்’ என்று புத்தகமாக வந் தது. இப்போது 62 வயது முடிந்து 63 வயது நடக் கிறது அவருக்கு. 4 பெண்கள் 2 பையன்கள் இருக்கிற்ர்கள்.
தம்பி முருகேசன் டி. பி. நோய் கண்டு 22-ம் வயதில் இறந்து போனுன் 1954-ல். பெரிய அண்ணுச்சி 1974-ல் இறந்து போனுர். அதுக்கு முந்திய வருடம் (1973ல்) அம்மா இறந்தாள். என் பெயர் கிருஷ்ணஸ்வாமி என்பது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது வந்தது. அதுக்கு முந்தி கோபாலகிருஷ்ணன் என்று தான் பெயர் பெரியப்பா பெயர் அது. இப்போது கூட பத்திரங்கள் பட்டாக்களே பொறுத்தவரை என் பெயர் அதுதான். அம்மா என்னே சொக்கையா’ என்றே அழைத்து வந்தாள். வல்லிக்கண்ணன் என்பது (ராஜவல்லிபுரம் கிருஷ்ண ஸ்வாமி என்பதை குறிப்பது) 1940-ல் நானுக வைத்து கொண்டது.
சிவசு:
பள்ளிப் படிப்பு பற்றிய தகவல்களை தாருங்களேன்
வ.க:
அந்தக் காலத்து வழக்கப்படி சரஸ்வதி பூஜைக்கு மறு நாள் உரிய முறைப்படி திருவிழா தடபுடலோடுஎனக்கு 'வித்யா ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. எனது 4 வது வயசின் இறுதியில். கோவில்பட்டியில் திண்ணை