உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலத்தின் குரல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


பள்ளிக்கூட அண்ணுக்கி ஒருவர் அட்சரப்பியாசம்’ செய்து வைத் கார் அவர் பெயரை அறிந்து கொள் ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது 1923-ல் கோவில்பட்டியில் பெரிய பள்ளிக்கூடம் ஒன் றில் முதல் வகுப்பு படித்தேன்.

1926, 27-ல் பெருங்குளம் எலிமெண்டரி ஸ்கூலில் 2-வது 3-வது படித்தேன்,

1928-ல் திருநெல்வேலி மந்திர மூர்த்தி ஹைஸ்கூலில் 4-வது வகுப்பு,

1929-ல் பாளையங்கோட்டை சேர்ந்தோம். 5-வது வகுப்பிலிருந்து செயின்ட் சேவியர்ஸ் ஹைஸ்கூலில் பயின்றேன்.

1936 மார்ச்சு மாதம் எஸ். எஸ். எல். சி. பரீட்சை எழுதி முடித்த பிறகு ராஜவல்லிபுரம் அடைந்தோம்.

சேவியர்ஸ் ஹைஸ்கூலில் படித்தபோது ஒவ்வொரு வருடமும் Good Conduct பரிசு எனக்கே அளிக்கப் பட்டு வந்தது.

ஹைஸ்கூல் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம் இசண்டி லும் முதலாவது அல்லது இரண்டாவது பரிசு தவருது எனக்கு கிடைத்து வந்தது.

1936 ஏப்ரல் முதல் 1937 அக்டோபர்முடிய ராஜவல்லி புரம் வாசம். அதுதான் முதன் முதலாக நான் ஊரோடு நெடுநாள் தங்கிய கால கட்டமாகும்.

அதன் பிறகு 1912-13 ல் இரண்டு வருடங்கள் சேர்ந் தாற்போல் தங்க நேரிட்டது. மற்றபடி இதர காலங் களில் 2 மாதம் 3 மாதம் அதிகம் போனுல் 6 மாதங் கள் என்றுதான் ராஜவல்லிபுரம் வாசம் எனக்கு சித்தித்துள்ளது.

சிவசு:
கதை எழுத வேண்டும் என்ற உந்துதல் (urge) எப்போது ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது?