ஆகவே, நான் சுத்த சுயம்பிரகாசச் சுயநலம் காரண மாகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இலக்கிய சேவைக்காகத் தான் நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று நான் சொன்னுல், அது என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாகும்.
சிவசு:
நீங்கள் பிறந்து வாழ்ந்து பழகிய இந்த சிற்றுரர்கனே நேசித்து, எந்த அளவில் உங்கள் படைப்புக்களில் அவற்றை தவழ விட்டுள்ளீர்கள் ?
வ.க:
புதுமைப்பித்தன் மாதிரி பரந்த அளவுக்கு நெல்லை மாவட்ட ஊர்களையும் இடங்களையும் நான் கதைகளில் இடம்பெறச் செய்யவில்லை.
ஆயினும், ராஜவல்லிபுரம், அதன் சுற்றுப்புறங்கள் என் சிறு கதைகளில் நிறைய இடம் பெற்றுள்ளன. சிவபுரம் என்று ஊர்ப் பெயர் வரும்.
இந்த வட்டாரத்து விந்தை மனிதர்கள் என் கதைகளில் நிறையவே வருகிறர்கள் 'நினைவுச் சரம்” என்ற நாவல் இவ்வூர், அதன் சுற்துப் புற ங் கள் , பாளையங்கோட்டை - திருநெல்வேலி வட்டாரங்களில் கடந்த ஐம்பது வருடங்களில் நிகழ்த் துள்ள பல்வேறு மாறுதல்களையும் சுவையக விவரிக்கிறது. சிவசு: வெளிவந்த புத்தகங்கள்....... வ.க: சிறு கதைகள் : 1. கல்யாணி 1944 கோவையில் ஒரு தனி நபர்