இவை தவிர எழுத்து வடிவத்தில் உள்ளவையும் பலப்பல் பலபல.
சினிமா உலகம் மாதம் இருமுறை, கிராம ஊழியன்’ மாதம் இருமுறை, 1950, 1951 (2 வருட) "ஹனுமான்’ வாரப் பத்திரிகை, சரஸ்வதி இதழ்கள் - இவற்றில் உள்ள என் எழுத்துக்கள் டஜன் கணக்கில் தொகுதி கள் தயாரிக்கும் அளவுக்கு வரும்,
சொகு. முனு. (சொள்ளமுத்து) சிந்தனைகள், சொன. முனு. குட்டிக் கதைகள், சொகு. முனு. ஒரங்க நாடகங்கள் - தனிரகமானவை. ஸ்ட்டயர் நிறைந்தவை.
சிவசு:
உங்கள் ஆரம்பகால எழுத்து சூழல், அரசியல், பொரு ளாதார, சமூக நிலைமை எப்படி இருந்தது? நீங்களும் சக எழுத்தாளர்களும் இலக்கியத்தில் அவற்றைப் பிரதிபலித்தீர்களா?
வ.க:
அந்நாட்களில், பத்திரிகைகள் மிகவும் குறைவு. புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதை விடக் குறைவு. எழுத்தாளர்களும் இப்போது போல் மிக அதிகமான நபர்கள் இருந்ததில்லை.
எழுதுகிறவர்களுக்கு 'ஆனந்தவிகடன் மட்டுமே பணம் தந்தது. கலைமகள் பெயர் பெற்ற எழுத்தா ளர்களுக்கு மட்டுமே 'சன்மானம் அளித்தது.
எழுதுகிறவர்கள் குறைவாக இருந்ததால், தரமான எழுத்துக்கன் எழுதுகிறவர்கள் ... யாராக இருந்தா லும் - பத்திரிகைகளில் தொடர்ந்து பிரசுர வாய்ப்பு பெறுவது எளிதாக இருந்தது.