ரண ஜனங்கள் பயப்படுர்படி அதிகாசம் வகித்தார்கள். அந்த காலத்திய சூழ்நிலை அப்படி.
அப்பா வேலை பார்த்த காலத்திலேயே நாவலாசிரியரான பெருங்குளம் அ.மாதவய்யாவும் எக்சைஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து இருக்கிறர். அவரை பற்றி, அவர் கதை எழுதுவது பற்றி அப்பா அந்தக் காலத்தில் சொல்லியிருக்கிருர்கள். மாதவய்யாவின் புத்தகங்கள் சிலவும், அவர் நடத்திய பஞ்சாமிர்தம்’ பத்திரிகையின் ஒன்றிரு இதழ்களும் 1930 க்கு முன்பு எங்கள் வீட்டில் கிடந்தன. அழிந்துபோயின.
அப்பாவுக்கு ஆஸ்துமா வியாதி உண்டு. 54 வயதில் இறந்து போனுர்கள் பாளே யங்கோட்டையில் வைத்து. அப்போது எனக்கு 10 வயது. First Form (ஆரும் வகுப்பு) படித்துக் கொண்டு இருந்தேன்.
சிவசு:
உடன் பிறந்தவர்கள் பற்றி கூறுங்கள்.
வ.க:
என் அப்பாவின் முதல் தாரமான கலியாணி அம்மாள் குழந்தை இல்லாமலேயே செத்துப்போனுள்.
இரண்டாவது தாரமான கிடாசக்குளம் சண்முக டிவு அம்மாள் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்து விட்டு இறந்தாள். அதுதான் கல்யாணசுந்தரம் என் பெரிய அண்ணுச்சி.
மூன்ரும் தாரமான தெற்குக் கார்சேரி மகமாயி அம்மாளுக்கு மூன்று மகன்கள். 1. கோமதிநாயகம், 2. கிருஷ்ண ஸ்வாமி 3. முருகேசன்.
அண்ணுச்சி கல்யாணசுந்தரம் கல்யாணம் செய்து கொண்டு ஊரிலேயே விவசாயத்தை கவனித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு ஒரே மகள் சண்முக வடிவு. அவளுக்கு கல்யாணமாகி நாலு பையன்கள் இருக்கிருக்கள்.