டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
19
3. ஆட்டத்தின் நோக்கம்
எதிர்க்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்ற இலக்கினுள் பந்தை எப்படியாவது செலுத்திவிட்டு, 'வெற்றி எண்ணைப் பெற்று, ஆட்டத்தில் வெற்றி பெறுவதுதான் ஆட்டத்தின் நோக்கமாகும். அதற்காக, இரு குழுவினரும் பந்தைக் கால்களால் உதைக்கலாம். மார்பால், வயிற்றால் தேக்கலாம். தடுக்கலாம். தலையால் இடித்துத் தள்ளலாம். எதிர்க்குழுவினர்களை ஏமாற்று கின்ற முறைகளால் தாக்கி ஆடலாம். தடுத்தாடலாம். இவ்வாறு விதிகளின்படி, எதிர்க்குழுவினரின் இலக்கிற்குள் பந்தைச் செலுத்திவிட்டால், (10வது பிரிவு 'வெற்றி எண்' பகுதியைக் காண்க) அந்தக் குழு தமக்குரிய வெற்றி எண்ணைப் (Goal) பெறுகிறது.
4. ஆடும் நேரம்
விளையாடுவதற்கு என, இரு பகுதி நேரங்கள் (Half) உண்டு. ஒவ்வொரு ஆட்டப் பகுதிக்கும் 45 நிமிடங்கள் ஆகும். ஆனால், மேற்கூறிய நேரம், அதிகமாக இருக்கிறது. குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினால், இரு குழுத் தலைவர்களும் ஏகமனதாக வற்றுக்கொண்டால் தேவையான நேரத்தை வைத்துக் கொள்ளலாம்.
எக்காரணத்தை முன்னிட்டும், இரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள இடைவேளை நேரம் 5 நிமிடங்களுக்கு மேல் போகக் கூடாது என்பதும் ஒரு விதியே.
மேலே கூறப்பட்டுள்ள கால வரையறைக்குள், எந்தக் குழுவும் வெற்றி எண்கள் பெறவில்லை என்றால், அவர்களுக்கு மிகை நேரம் (Extra Time) வழங்கப்படும்.