உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

33


3) தானே பந்தைக் கால்களால் ஆடிக் கொண்டிருக்கும் போதும் சரி, எதிர்க் குழுவினரிடமிருந்து நேராக தன்னிடம் பந்து வரும்போதும் சரி, அதை அவர் ஆடும்போதும் அயலிடம் ஆவதற்கு வாய்ப்பேயில்லை.

4) நடுவரால் பந்து கீழே போடப்பட்டு ஆட்டம் தொடங்கும்போதும், வெளியில் இருந்து உள்ளெறிதலின் மூலம் தான் பந்தைப் பெறுகின்ற பொழுதும், குறியுதை மற்றும் முனை உதை மூலமாக பந்தைத் தானே முதன் முதலாகப் பெற்று ஆடுகின்ற சூழ்நிலைகளிலும் அவர் அயலிடம் ஆவதில்லை. -

ஆகவே பந்தை வாங்கும்போது, ஒருவர் எங்கு நிற்கிறார் என்பதைக் கவனிக்காது, அவருடைய குழுவினர் பந்தை ஆடி அவருக்கு வழங்கும்போது, அவர் எங்கு நிற்கிறார் என்பதை அறிந்தே அயலிடம் என்பதை முடிவெடுக்க வேண்டும்.

ஒருவர் அயலிடத்தில் நிற்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தவறிழைத்ததாகக் கருதப்பட்டு, அவர் குழுவுக்கு எதிராக 'மறைமுகத் தனியுதை' எடுக்கும் வாய்ப்பை எதிர்க் குழுவினரில் ஒருவர் பெறுவார்.

இதன் மூலம், பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது.

12. உள்ளெறிதல் (Throw-in)

பந்தானது பக்கக் கோட்டிற்கு (Side line) வெளியே போவது போல விளையாடிய குழுவிற்கு எதிராக எதிர்க்-