உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கால் பந்தாட்டம்


இணையாக வரும் பொழுதும், தரையோடு தரையாக உருண்டு பறந்து வரும்பொழுதும் பந்தைத் தடுத்துக் காப்பாற்றுகின்ற ஒரிரு நிமிட நேர செயலுக்கு நிச்சயம் தேவை திறமை, துணிவு, வலிமை, இடமறிந்து செயல்படும் மன ஊட்டம், லாவகமாக வளையும் உடல் ஏற்றம்.

பந்தின் மேலேயே கண்ணுங்கருத்துமாகக் குறியோடு பார்த்தாடும் பந்தின் நோக்கம். இவையெல்லாம் நீண்ட காலப் பயிற்சிக்குப் பிறகே வரும். இல்லையேல், அதிகமான முயற்சியும், அக்கறையில்லாத மன எழுச்சியும், அதன் வழியாக வரும் அசிங்கமான செயலும், குழம்பிக் கொள்ளும் பண்பும், அவசர முடிவும் அத்தனையும் ஆட்டத்தைக் கெடுத்துவிடும். அவப்பெயரையும் வாங்கிக் கொடுத்துவிடும்.

தன்னை நோக்கிப் பந்து எப்பொழுது வந்தாலும், வயிற்றோடு சேர்த்தணைத்துக் கொள்வதுபோல கைகளால் வாங்கிக் கொள்கிற முறையையே பின்பற்ற வேண்டும். பந்தைத் தாவிப் பிடித்துத் தரையில் உருண்டோடுகின்ற திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன், இலக்குக் காவலர் இன்னொரு கடைக்காப்பாளர் போல முன்னேறிச் சென்று, கால்களால் உதைத்துப் பந்தை அனுப்பிவிடலாமா என்றால், அது அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தே அமையும்.

இதை, கடைக்காப்பாளர்களுடன் கலந்து பேசி, எதிராளிகளின் ஆட்டமுறைக்கேற்ப, இலக்குக் காவலர் ஏற்றதொரு முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். பந்து எங்கே இருக்கிறது என்பதைக் கண்காணித்துவிட்டு,