டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
41
அதைப் பிடிக்க முடியுமா, இல்லை உதைக்க முடியுமா அல்லது வெளியே அனுப்பிவிட முடியுமா என்பதை, யோசித்தே செயல்பட வேண்டும். அதே சமயத்தில், பந்தை விட்டுவிட்டு, முன்னேறி வரும் எதிராளியைத் தடை செய்யும்போது, வேறொருவர் காலில் பட்டு பந்து எளிதாக இலக்குக்குள் சென்றுவிடக் கூடும்.
அதேபோல், இலக்கைக் காப்பதில் இருந்து பந்துக்காக முன்னோக்கிப் பிடிக்க ஓடிவருவதும், பிறகு மனம் மாறி அங்கேயே பாதியில் பதறிப்போய் நின்றுவிடுவதும் தவறாகும். இது அரைகுறை அனுபவத்தையே பிரதிபலிக்கும். எதிராளிக்குப் பந்தை எளிதில் உதைத்தாடக்கூடிய வழியையும் வகுக்கும். இப்படி ஒடி வந்து சமாளிக்கலாம் என்றாலும், இது எப்பொழுதும் இலக்குக் காவலருக்கு எதிரான பலனையே அளிக்கின்ற அபாயகரமான ஆட்டமாகவே மாறிவிடுகிறது.
அப்படியே ஆடக் கூடாதா என்றால், இது போன்றும் உதைத்தாடலாம். ஆனால், அன்றைய ஆட்டத்தைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆழ்ந்த அனுபவம், பந்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஆட்டத்தின் சூழ்நிலை. அவருக்குரிய இயல்பான ஒட்டத்தின் வேகத்திறமை, அத்துடன் அவர் எடுக்கின்ற சரியான முடிவு இத்தனையிலுமே அவரது முயற்சியின் வெற்றி அடங்கி கிடக்கிறது.
ஒரு சிலர், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே ஒடி வந்து பந்தை உதைத்துவிட முயல்வார்கள். அதனால், அந்த நேரத்தில் தமக்கு ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க அந்த முறை உதவலாம்.