42
கால் பந்தாட்டம்
ஆனாலும், அது அபாயகரமான ஆட்டமே! எதிராளிக்கு அந்த சூழ்நிலையில் பந்தை இலக்கிற்குள் உதைத்து விடுவது எளிதே. நிச்சயம் அதேபோல் நேர வாய்ப்புண்டு.
எதிர்க் குழுவினர் அடிக்கடி இலக்கை முற்றுகையிட்டு, திடீர்த் தாக்குதலை நிகழ்த்தும்போது எங்கே நின்று பந்தைத் தடுத்து இலக்கைக் காப்பது என்று அறிவது நல்ல பலனையே கொடுக்கும். எதிர்க்குழு முன்னோட்டக்காரர் பந்துடன் இலக்கை நோக்கி ஓடி வருகிறார் என்றால், பந்தை உதைக்கும் இடம் இலக்கின் ஓர் முனையை (Angle) நோக்கியே. அப்பொழுது எங்கு நின்றால் பந்தைத் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இலக்குக் கோட்டின் மத்தியிலே நின்று கொண்டிருந்தால், காவலருக்கு இருபுறமும் 4 கெஜ தூரம் இருக்கும். அப்பொழுது பந்தைத் தடுக்கின்ற வாய்ப்பும், பந்து இலக்கினுள் நுழைய இருக்கும் இடைவெளிப் பகுதியும் அதிகமாகவே இருக்கும். அதனால் பந்தைப் பாதுகாப்பாகத் தடுத்துப் பிடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுபடும். ஆகவே அந்த 4 கெஜ தூரமுள்ள இடை வெளியைக் குறைத்தவாறு நின்று கொண்டிருந்தால் சுலபமாக இருக்குமல்லவா?
இடவெளியை எப்படிச் சுருக்குவது? இலக்கின் கடைக்கோட்டின் மத்தியில் நிற்பதிலிருந்து, அங்கிருந்து மைதானத்தின் முன்புறமாக ஐந்து அல்லது ஆறு அடி துரம் முன் வந்து நின்றால், பந்தை அடித்து இலக்கினுள் அனுப்பக்கூடிய இடைவெளிக் கோணம் (Angle) குறையும். தடுப்பதற்கும் எளிதாக இருக்கும். இவ்வாறு