உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

43


இன்னும் முன்னே வந்து நின்றால் தடுக்க எளிதாக இருக்கும் என்று ஒரு சிலர் முன்னேறிப் போய்விடுவர். அதனால் நிலை மாறிப்போகுமே ஒழிய, நினைக்கின்ற பயனை அடைய முடியாது.

இலக்குப் பரப்பிற்குள்ளே முன்னே நடந்து வருவதும், பின்னே நகர்ந்து செல்வதும் எல்லாம் சரிவர நடைபெற வேண்டும். சிறிது தூரம் முன்னே வந்து விட்டது கண்ட எதிர்க்குழுவினர், பந்தை இலக்குக் காவலர் தலைக்கு மேலாக இலக்கினுள் பந்து போய்விடுவது போல உயர்த்தியவாறு உதைத்தாடி விடுவார்கள். அப்பொழுது, பின்னோக்கிச் சென்று பந்தைப் பிடிப்பது என்பது எளிதான செயலன்று.

பந்துடன் ஓடி வருகின்ற எதிர்க்குழு ஆட்டக்காரரை தனியே விட்டுவிட்டால், தடுக்க ஆளில்லாமல் அவர் எளிதாக இலக்கினுள் பந்தை அடித்துவிடுவார் என்ற நிலை ஏற்பட்ட பிறகு என்ன செய்யலாம்? திடீரென அவருடைய கால் மீது துள்ளிப் பாய்ந்து விழுந்து விடுவதுதான். அவ்வாறு விழுந்துவிடுவதன் நோக்கம் அவரது முயற்சியைத் தொடரவிடாமல் தடுத்துவிடுவதே. அவ்வாறு விழுந்து பந்தைப் பிடிப்பதற்கு முன், ஆட்ட நேரத்தில் பந்து எங்கெங்கு எப்படி எப்படியெல்லாம் ஆடப்பட்டு வந்திருக்கின்றது? அதன் இறுதி நிலை என்ன? என்பனவற்றை உன்னிப்பாக ஆராய்ந்து உடனடியாகச் செயல்படுவதுதான் சிறந்த ஆற்றல் உள்ளவர்களுக்குரிய திறமையாகும்.

எப்பொழுது பந்தைப் பிடிக்க வேண்டும்? எப்பொழுது பந்தை தட்டிவிட வேண்டும்? எப்பொழுது விழுந்து பிடிக்க (Dive) வேண்டும்? எப்பொழுது