10
பந்தை 'டெஸ்ட்' ஆட்டத்திலிட்டுப் பயன்படுத்துவதற்கு முன்பு, இரு குழுத் தலைவர்களும், நடுவர்களும், அதனை பரிசோதனை செய்து அங்கீகரித்திட வேண்டும்.
3. ஆடிக்கொண்டிருக்கும்போது, ஆட்ட நடுவில் பந்து காணாமல் போனால் என்ன செய்வது?
பந்து காணாமல் போய்விட்டால், வேறொரு பந்தை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடங்க நடுவர் அனுமதிப்பார்.
ஒரு பந்தடி ஆட்டக்காரர் {Batsman) அடித்தாடிய பந்தை, தடுத்தாடிய ஆட்டக்காரர்கள் கண்டுபிடிக்க முடியாமற்போகிறபோது அதாவது காணாமல் போய்விட்டது என்று அவர்கள் கூறுகிற பொழுது, அதனைத் தொடர்ந்து, அந்தப் பந்தை அடித்தாடிய ஆட்டக்காரருக்கு 6 ஓட்டங்கள் (Runs ) நடுவரால் கொடுக்கப்பட, அது அவரது குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளப்படும்.
தடுத்தாடிய குழு (Fielding side) அந்தப் பந்து காணாமற் போய்விட்டது என்று கூறுவதற்குள்ளாகவே, 6 ஓட்டங்களுக்கு மேல் அந்த ஆட்டக்காரர்கள் (இருவரும்) ஓடி எடுத்திருந்தால், அத்தனை ஓட்டங்களும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
4. காணாமற் போய்விட்ட பந்திற்குப் பதிலாக, புதிய பந்து ஒன்றைக் கொண்டு வந்து ஆடலாமா?
ஆட முடியாது. ஒவ்வொரு முறை ஆட்டம் (Inning) தொடங்குகிறபொழுது தான், புதிய பந்தி-