உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

 விழுந்தபிறகு, விக்கெட்டுகளுக்கு இடையேயுள்ள தூரம் தவறென்று கண்டுபிடித்த பிறகு, எவ்வாறு முடிவெடுக்கக் கூடும்?

ஆட்டம் உடனே நிறுத்தப்பட்டு, விக்கெட்டுகளுக் கிடையேயுள்ள தூரத்தை அளந்து சரிப் படுத்தி, பிறகு மீண்டும் புதியதொரு போட்டி ஆட்டத்தைத் தொடங்கிட வேண்டும்.

12. குறிக் கம்புகளுக்கு (Stump) மேலே உள்ள இணைப் பான்கள் பலத்த காற்றினால் அடிக்கடி கீழே விழ நேர்ந்தால் அதற்கு என்ன செய்வது?

பந்தெறியும்போது, விக்கெட்டில் பந்துபட்டு அங்கு வளைமாடப் பகுதி போல அமைந்துள்ள இணைப்பான் அல்லது இணைப்பான்கள் கீழே விழுந்தால், பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விடுவார் (Out).

ஆனால், காற்றினால் இணைப்பான்கள் தானே அடிக்கடி கீழே விழுந்தால், அதனால் பயன் கிடையாது. பதிலாக துன்பம்தானே. அதற்காக, இரு குழுத் தலைவர்களும் ஏகமனதாக, இணங்கி ஒத்துக் கொண்டால், இணைப்பான்களை குறிக்கம்பிலிருந்து நீக்கிவிட்டே தொடர்ந்து ஆடலாம்.

12. விக்கெட்டுகள் வைத்திருக்கும் பந்தாடும் தரைப் பகுதியின் (Pitch) அகலம் எவ்வளவு?

விக்கெட்டில் உள்ள நடுக் குறிக்கம்புக்கு (Stump) 5 அடி அகலம் இருபுறமும் இருக்குமாறு அமைந்திருப்பதுதான் பந்தாடும் தரைப் பகுதியின் அகலமாகும்.