22
உணவுக்காகத் தருகின்ற இடைவேளை நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் போகக்கூடாது.
28. பந்தடித்தாடிய ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்து, அவரிடத்தில் போய் ஆடப்போகும் ஆட்டக்காரர் (Batsman) எத்தனை நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் ஆட வந்துவிட வேண்டும்?
2 நிமிடங்கள் தான்.
29. 'விளையாடத் தொடங்கு' (Play) என்று நடுவர் கூறிய பிறகு, விக்கெட்டை நோக்கிப் பந்தை எறிந்து பார்க்க (Trial Ball} ஒரு பந்தெறியாளருக்கு (Bowler) எத்தனைத் தடவை அனுமதிக்கப்படுகிறது?
மாதிரிப் பந்துகள் எறிந்து பார்க்க அனுமதியே கிடையாது. விளையாடத் தொடங்கு என்றதும் உடனே பந்தை எறிந்து, ஆட்டத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.
30. ஒரு பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகிறார் (Out), இன்னொரு ஆட்டக்காரர் ஆடவருவதற்குள், எறிந்து பழக பந்தெறியாளர்களுக்கு அனுமதி உண்டா?
எறிந்து பழக முடியாது. அதோடு இன்னொரு ஆட்டக்காரர் வைத்திருக்கும் மட்டையை வாங்கிக்கொண்டு, ஒருவர் பந்தை எறிய அதை அடித்தாடுவதும் கூடாது. பந்தெறியும் பயிற்சி (Bowling Practice ) விளையாட்டு நடக்கின்ற எந்த நேரத்திலும் தவிர்க்கப் படவேண்டியதாகும். இது தடுக்கப்பட்டிருக்கிறது.