உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


அடித்தாடுகின்ற இடத்திலிருந்து. அந்தப் பந்தை அடித்தாட முடியாத அளவுக்குத் தூரமாக பந்தெறிந்தால், அதனை ‘எட்டாத பந்தெறி’ என்று கூறுகின்றர்கள்

அதனை அடித்தாட முடியாத அளவு தூரமாக பந்தெறியப்பட்டிருக்கிறது என்று நடுவர் கருதினால், அந்தப் பந்தை, எட்டாத பந்தெறி என்று. அந்தப் பந்து, அடித்தாடுபவரைக் கடந்து சென்றவுடன் குரல் எழுப்பிச் சைகையும் காட்டுவார்.

47. எட்டாத பங்தெறிக்கு நடுவர் காட்டும் சைகை என்ன?

முறையிலா பந்தெறிக்கு ஒரு கையை நீட்டிக் காட்டியது போல், எட்டாத பந்தெறிக்கு இரண்டு கைகளையும் (தரைக்கு சமமாகக் காட்டுவதுபோல). நீட்டி கையை காட்டுவார் நடுவர். (படம் காண்க)