பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
viii

எவ்வாறு பாரையோ, ஊரையோதான் ஆளமுடியும் என்ற வினாவினை எழுப்புகின்ற கவிஞர், “எப்படி ஆள்வீர்?” என்ற தலைப்பிலே அமைந்துள்ள பாடல்களைப் படிக்குந்தோறும் படிக்குந்தோறும் கவிதையின்பத்தையும் கவிதையின் பயனையும் ஒருவர் அடையாதிருத்தல் இயலாது.

எடுத்துக்காட்டுக்களாகச் சிலவற்றைச் சுட்டிக்காட்டினேன். இக்கவிஞர் இயற்கைப்பொருள்களைப் பற்றியும், செயற்கைப் பொருள்களைப் பற்றியும், விலங்கைப் பற்றியும், பறவைகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும், மொழியைப் பற்றியும் எவ்வளவு சிறப்புறப் பாடியுள்ளார் என்பதை அறிய வேண்டுவோர் நூலினை வாங்கி ஒதினால் கட்டாயம் உணர்வார்கள் என்பது உறுதி.

பொருத்தமான நல்ல படங்களோடும், நல்ல கட்டிடத்தோடும், அட்டைப் படத்தோடும் கொட்டை அச்செழுத்துக்களில் கண்கவர் வனப்பமைய இதனை வெளியிட்டுள்ள ‘வள்ளுவர் பண்ணை’யாரைப் பாராட்டுகிறேன்.

இவைபோன்ற நூல்கள் தமிழ்ப் பெற்றோராற் பொதுவாகவும், தமிழ்ச் சிறுவர்களாலும் ஆசிரியர்களாலும் சிறப்பாகவும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

சென்னை-5
17-11-1959 அ. சிதம்பரநாதன்