பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கெடிலக்கரை நாகரிகம்


அரிது அப்படியே செங்கோணமாக வளைந்திருப்பினும், ஆற்றின் தெற்கு வடக்கான அந்தப் பகுதியில் புகழ்பெற்ற திருப்பதிகள் அமைந்திருப்பது அரிது. ஆனால், இந்த வாய்ப்பு கெடிலத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் ஒருசேரக் கிடைத்திருக்கிறது. ‘கிழக்கு நோக்கி ஒடுவதுதான் இயற்கையான முறை; வடக்கு நோக்கி ஓடுவது சிறப்பன்று’ என்று யாரும் வீண்வம்பு செய்யாதபடி, வடக்கு நோக்கி ஒடுவதைப் பெருமைக்கு உரியதாகப் பெரியவர்கள் பெரிதுபடுத்துப் பேசியிருப்பது, கெடிலமும் திருவயிந்திரபுரமும் சேர்ந்து பெற்ற பெரும்பேறே.

இயற்கைக் காட்சிச் சிறப்பு

உத்தர வாகினி எனப் பெரியவர்களால் புகழப்பட்டிருக்கும் தெய்வத் தன்மையினால் மட்டுமின்றி, இயற்கைச் சூழ்நிலை யாலும் அந்த இடம் மிகச் சிறந்ததே. கெடிலத்தின் பயணத் திடையே திருவயிந்திரபுரக் கரைப்பகுதிதான் அழகு மிக்க இயற்கைக் காட்சி உடையதாகும். ஆறு வளையும் செங் கோணத்தின் இரு சிறகுகளும் மலைதான். மலை மேலும் மலையின் கீழும் கோயில்கள் உள்ளன. கீழ்க்கோயிலின் சுவரின்கீழ் ஆறு ஓடுகிறது. கோயிலிலிருந்து ஆற்றிற்கு இறங்கும் படிகளில் நின்று கொண்டு மேற்கே பார்த்தால் ஆற்றின்

அனைத்தேக்கமும் பசுமையான எதிர்க்கரைப்பகுதிகளும் காட்சியளிக்கும். கிழக்கே திரும்பிப் பார்த்தால் கோயிலும் மலையும், தெற்கே பார்த்தால் மலையின் வளைவும் ஆற்றின் வளைவும். வடக்கே பார்த்தால் திருவயிந்திரபுரம் அணை. மலை ஆறு இவற்றின் வளைவு, கோயில், அணை ஆகிய மூன்றும்