உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



விளையாட
உட்காரும்முறை

வீட்டில் விளையாடும்பொழுது "ஆடும் பலகையைக்” (Carrom Board) கீழே தரையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். நல்ல வசதியுள்ளவர்கள், நாற்காலி அல்லது முக்காலியில் அமர்ந்துகொண்டு, ஆடும் பலகையை மேசை மீது வசதியான முறையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்கள்.

போட்டி ஆட்டம் என்றால், அதற்கெனத் தயாரிக்கப்பட்ட 'ஆடும் பலகை'யை 25 அங்குலத்திலிருந்து 28 அங்குலம் உயரமுள்ள தாங்கியின் (Stand) மேல் இருத்தி, அமரும் ஆசனங்கள் நான்கினை நாற்புறமும் ஏற்ற முறையில் இருக்குமாறு வைத்து, அவற்றில் அமர்ந்து விளையாடச் செய்வார்கள்.