உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காய்களை
அடித்தாடும் முறை


ஆட்டப் பலகையில் உள்ள காய்களை அடித்துக் கலைத்து விளையாட, அடிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டி நேரத்தில், பங்கு பெறுகின்ற ஆட்டக்காரர் தனக்கென்று அடிப்பானைக் கொண்டு வர வேண்டும்.

அதனை, போட்டிதனை நடத்துகின்ற அதிகாரிகளிடமும் நடுவரிடமும் காண்பித்து, ஆடுவதற்கு அது ஏற்றதுதாம் என்று ஒரு சோதனை மூலம் கிடைத்த பரிந்துரையை பெற்றுத்தான் ஆட்டத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால், ஒரு சிலர் தனது அடிப்பான் நன்கு கனம் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்