25
உலோகத்தினை அதில் பதித்துக் கொண்டு வந்து விடுபவர்களும் உண்டு.
அடிப்பானை தன் ஆட்டத்திற்குப் பயன்படுத்துகின்றவர்கள், ஆர அமர சிந்தித்து, ஒரு முடிந்த முடிவுடனே தான் அதனை தெளிவு செய்ய வேண்டும். ஆட்டம் தொடங்கியவுடனே, நினைத்த நேரத்தில் அடிப்பானை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
ஒரு போட்டி ஆட்டத்தில், ஒரே ஒரு தடவை மட்டுமே அடிப்பானை மாற்றிக் கொள்ளலாம், அதையும் அந்த முறை ஆட்டம் முடிவதற்குள், சரியில்லை என்று மாற்றிக் கொள்ள முடியாது. அந்த முறை ஆட்டம் முடிவடைந்த பிறகு, மறு முறை ஆட்டம் தொடங்குகின்ற நேரத்தில்தான் அடிப்பானைமாற்றி, வேறொன்றை பயன்படுத்திக்கொண்டு ஆடலாம்.
மாற்றிக் கொண்ட ‘புது அடிப்பான்’ ஏதோ ஒரு சில காரணங்களால், மாற்றியவருக்கு வசதியாகவோ, அல்லது ஏற்றதாகவோ ஆடுதற்குப் பயன்படாமல் போய் விட்டால், அவரது பழைய அடிப்பானையே பயன்படுத்திக்கொள்ள அவர் அனுமதிக்கப்படுவார்.
அதற்காக, அவர் இரண்டையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்த முயலக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தவும் முடியாது.
இனி அடிப்பானை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்வோம்.