இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
— 31 — புதிய சமுதாயம் அமைக்க உண்மையோடு உழைப் பவர்கள், நேர்மையைப் போற்றுகிறவர்கள், சிறு உழைப் பைக் கூட கேவலமாகக் கருதாதவர்கள் முன் வரட்டும் நாட்டுக்கு நல்லன செய்யட்டும்! - ★
- இன்றைய உண்மையை உயர்வை இசைக்க!
அன்றாட வாழ்வின், தொழிலின் சிறப்பை மக்களுக்கு உணர்த்துக ! ஒவ்வொருவரும் கைத்தொழில் உழவு, நடவு, தோண்டுதல், மரம் செடி பழவகை காய்கறி பூ வகை பலவும் வளர்த்துக் காத்தல் அவசியம்; ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஏதேனும் ஒரு தொழில் புரிதல் அவசியம் எனச் சாற்றுக! சுத்தி, ரம்பம், கொத்து வேலைகள், சாயம் பூசுதல். தையல் அலுவல், மருத்துவம், சுமை தூக்குதல் சலவை, சமையல், சுத்தம் செய்தல் இவற்றை எளிதாக்க ஏதேனும் அற்புத ஆராய்ச்சி காணல். - இவற்றில் முனைவதில் கேவலம் எதுவுமே இல்லை என்று உணரச் செய்க ! இவ்விதமான மிக உயர்ந்த பண்புகளைப் பற்றி கவி களும் கலைஞர்களும் பேசட்டும் என்று நான் நாவலிக்கிறேன்."