உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொடு கல்தா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன உதாரணம் வேண் டும்? அதிக உழைப்பு இல்லாமல், பழக்க வழக்கங்களில் திட்டமான வரையறைகள் இல்லாமல் வெற்றி பெற முயல்வது பலன் தராது. வேலை செய்யும் பழக்கங்கள் வேலை நேரம், உழைப்பில் காட்டும் சிரத்தை - அனைத்தி லும் சீர்திருத்தம் தேவை. இந் நான்கு விதிகளும் கவனத்துக்கு உ ரி ய வை: 1) மொத்தத்தில் நாட்டு மக்களின் உழைப்பு நேரம் மிகக் குறைவாகவும், திட்டமான அமைப்பு முறையற்றும் உள் ளது. உழைப்பு நேரம் அதிகமாக்கப் பெற்று, திட்ட மான கட்டுப்பாடுகளுக்குள்ளாக வேண்டும். (2) வாழ் வின் ஒவ்வொரு துறையிலும் ஒற்றுமை, சமத்துவம், கூட் டுறவு ஆகியவற்றை வளர்க்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். (3) உழைப்பிலே உண்மை, ஒழுக்கம், நிறைவு காட்ட ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வே ண் டு ம் . (4) அன்றாட வாழ்விலே சகோதர மனிதர்களிடம் அன்பும் ஆதரவும் காட்ட வேண்டும். முன்னேற விரும்புகிறவர்கள் பின்கண்ட விதிகளையும் நினைவில் நிறுத்துவது நல்லது. பேங்கிங் ஹவுஸ் ஆவ்ராத்ஸ்சைல்ட் எனும் பெரிய பிரபல ஸ்தாபனத்தின் தந்தை விட்டுச்சென்ற சொத்திலே கண் டெடுக்கப்பட்டவை இவை துன்பத்தை பொறுமையுடன் சகித்துக்கொள்க; வாழ்க்கைப் போராட்டத்தில் தைரிய மாக இருங்கள்; உங்கள் வாழ்க்கையின் நேர்மையை, உண்மையைப் பு னி த க் கொள்கைகளாகப் போற்றுக; உங்கள் காலத்தை நன்கு பயன்படுத்துக; அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து எதிர்நோக்கியிருக்க வேண்டாம். உண் மையாக உழைத்துப் பாடுபடுங்கள். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/37&oldid=1396080" இலிருந்து மீள்விக்கப்பட்டது