பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழ்மக்களின் வாழ்க்கையினை விளங்கத் தெரிவிப்பன தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் சிலப்பதிகாரம் ஆகிய செந்தமிழ் நூல்களாம். இந்நூல்களை அடிப்படையாகக்கொண்டு இவை தோன்றிய காலமாகிய சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையினைச் ’சங்ககாலத் தமிழ் மக்கள்’ என்னும் இந்நூல் காட்டுகிறது.

இந்நூலில் சங்ககாலத் தமிழகத்தின் பரப்பும், அதன் வளங்களும், அங்கு வாழ்ந்த தமிழரது குடிவாழ்க்கையும், ஆடவர்பெண்டிர்களுடைய சிறப்பியல்புகளும், தமிழ் மக்களது கல்விப் பயிற்சியும், தொழில் வன்மையும் இன்ன இன்னவெனச் சுருக்கமாக எளிய இனிய நடையில் விளக்கப்பெற்றுள்ளன. சங்ககாலத்தே வாழ்ந்த செந்தமிழ்ப் புலவர்களின் உள்ளத்துணர்ச்சியினைக் கல்லூரி மாணவர்கள் சுருக்கமாக உணர்ந்துகொள்ளுதற்கு இந்நூல் துணைசெய்யுமென்று கருதுகிறேன்.

30-06’48.

ஆசிரியன்.