உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனர் 1} .

குட்டி கூட்டுள் அடையுண்டு வளர்வதேபோல், கரிகாலன் பகைவர்தம் சிறையகத்தே வாழ்ந்திருந்தான்் பகைவரைப் பாழ்செய்யும் ஆற்றல் வந்துற்றது என அறிந்தவுடனே, தன்னேப் பிடிப்பார் வெட்டிய பள்ளத்தே வீழ்ந்த ஆண் யானே, வருந்திச் செயலற்றுப்போகாமல், தன் இரு கோடுக. ளாலும், கரைகளேக் குத்திக் குழியினத் துார்த்து வெளி யேறித் தன் பிடியை அடைந்தாற்போல, அச்சிறையி' ளிைன்றும் வெளியேறுதற்காம் வழிவகைகளே நுணுகி. ஆராய்ந்து முடிவுசெய்து, தன் வாள்துணையால் அப்பகை. வரைத் திடுமெனத் தாக்கி அழித்து வெளிப்பட்டுத் தனக். குரிய அரசினேத் தான்் பெற்றுச் சிறப்புற்ருன் எனக்கூறும்" புலவர்தம் உவமை புலமைநலம் பொலிய விளங்குவதோடு ' கரிகாலன் அறிவு, ஆண்மை, உரம், ஊக்கம் ஆகியவற்றை உணர்த்தி நிற்பதும் காண்க.

'கூருகிர்க், கொடுவரிக்குருளே, கூட்டுள் வளர்ந்தாங்குப்

பிறர். பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கரையான பிடிபுக் காங்கு, துண்ணிதின் உணர நாடி, கண்ணுர் செறிவுடைத் திண்காப்பு ஏறிவாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தி." -

. (பட்டினப் : உஉ0 எ): "பல்ஒளியர் பணிபொடுங்கத்,

தொல்அரு வாளர் தொழில் கேட்ப, வடவர் வாடக், குடவர் கூம்பத், தென்னவன் திறல்கெட -

"புன்பொதுவர் வழிபொன்ற . . . . .

இருங்கோ வேள் மருங்கு சாய.' -

- - - (பட்டினப் : உஎ - அடி):

என்ற அடிகள் கரிகாலன், ஒளியர், அருவாளர், வடநாட். டரசர் சேரர், பாண்டியர், பொதுவர், இருங்கோவேள்