உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊4 மாநகர்ப் புலவர்கள்

கடற்கரை நகரங்களில், ஏணி இட்டும் ஏறமாட்டா உயரிய மாடங்கள் அமைத்துக் கடலிற்செல்லும் கலங் .களுக்கு வழிகாட்டும் விளக்குகளே அமைத்து வாழந்தனர் தமிழர். ஏணி சாத்திய ஏற்றரும் சென்னி, விண்பொர .கிவந்த வேயா மாடத்து, இரவில் மாட்டிய இலங்குசுடர் ஒருகிழி, உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும் துறை.' (பெரும்பாண் : 347-351). கடல்விளை வெள்ளுப்பைக் கொண்டுசென்று விற்று, அதற்கு விலையாகப் பெற்ற நெல்லே ஏற்றிவந்த சிறுசிறு படகுகள் பல வரிசையாக கிற் கும் படப்பைகளைத் தமிழ்நாட்டின் கடற்கரைநெடுகக் க்ாண .லாம். 'வெள்ளே உப்பின் கொள்ளே சாற்றி, நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, பனேகிலேப் புரவியின் அணமுதற் பிணிக்கும், கழிசூழ் படப்பை.' (பட்டினப்பாலே : 29-82). .பால்போலும் வெண்ணிறம் வாய்ந்த குதிரைகளோடு, வட நாட்டு வளம் பலவற்றையும் கொணர்ந்த பெரிய பெரிய நாவாய்கள் பலவும் அப் படப்பைக்கண் வந்துகிற்கும். போற்கேழ், வால்உளேப் புரவியொடு வடவளம் தரூஉம், காவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை” (பெரும்பாண் : 81921). கடல் அலேகளால் அசைந்து, அசைந்து கிற்கும் நாவாய்கள், கட்டுத்தறியில் பிணிப்புண்டு ஆடிகிற்கும் களிறுகள்போல் தோன்றும் ; கொடி விளங்கும் கூம்பு களேயுடைய அத்தகைய, நாவாய்கள் பல புகார்த் துறைக்கண் நின்று காட்சி தரும். 'வெளில் இளக்கும் களிறுபோலத், தீம்புகார்த் திரைமுன் துறைத் துரங்கு நாவாய் துவன்றிருக்கை, மிசைக்கூம்பின் இசைக் கொடி யும்." (பட்டினப் : 172-5). அக்கால நாவாய்கள் தாமே இயங்கும் இயந்திரப் பொறிகளே உடையன அல்ல; அவை காற்றுச் செலுத்தச்செல்லும் இயல்புடையனவாம்; இத் தகைய நாவாய்களின் துணையைக்கொண்டே தமிழர்கள், குதிரைகள், கரியமிளகு, வடமலேயிற் பிறந்த மணி, பொன், குடமலையில் தோன்றிய சந்தனம், அகில், தென்திசைக் கடலிற் பிறந்த முத்து, கீழ்க்கடலில் பிறந்த பவளம், கங்கைக் கரைக்கண் உளவாம் அரும் பொருள், காவிரி யாற்றுப் பயனல் உண்டாய பல பொருள், சமுகாட்டு