உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனர் 15

உணவுப் பொருள்கள், கடாரநாட்டு அரும்பொருள் گلا,9ے அரிய பெரிய பொருள்கள் பலவும் கொணரவும், கொண்டு செல்லவும்படும். • *

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும், குணகடல் துகிரும், கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழத்து உணவும், காமுகத்து ஆக்கமும்

அரியவும், பெரியவும் கெரிய சண்டி

வளங்தலே மயங்கிய கனந்தலை மறுகு.' - -

- (பட்டினப் : க.அடு-ககங்.)

உள்நாட்டில் மிக்குத் தோன்றிய பொருள்களே வெளி காட்டிற்குக் கொண்டுசென்று விற்கவந்தனவும், உள்நாட் டார்க்கு வேண்டும் பொருள்களைத் தருதற்கு வெளிநாட்டி ளிைன்றும் கொணர வந்தனவும் ஆய பொருள்கள், கிலத்தி ளிைன்றும் நாவாய்களில் ஏற்றவும், காவாய்களினின்றும் கிலத்தில் இறக்கவும்படும். இத்தகைய பொருள்கள் அளக் தறியமாட்டா அளவினவாயினும், அவற்றை முறையே அளந்தறிந்து, அவற்றிற்காம் சுங்கம் கொள்வோர், ஞாயிற் றின் தேரிற்பூண்ட குதிரைகளேபோல் கடமை தவருது, தளர்ச்சி நோக்காது தம் கடனுற்றி, உரிய சுங்கத்தினேப் பெற்றுப் பெறப்புட்ட பொருள்கள்மீது பெற்றதற்காம் அறிகுறியாகத் தங்கள் அரச இலாஞ்சனேயாகிய புலியைப் பொறித்துப் பேர்கவிடுவர். - * , ,

'கல்லிறைவன் பொருள் காக்கும்

கொல்லிசைத் தொழின் மாக்கள் காய்சினத்த கதிர்ச் செல்வன் தேர்பூண்ட மாஅ போல வைகல் தொறும் அசைவின்றி உல்குசெயக் குறைபடாது