உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கருவூர்க்கண்ணம் புல்லனுர்

இவர் பெயர் கருவூர்க் கண்ணம் பாள்ளுர் எனவும், கருவூர்க் கண்ணம் பாணனர் எனவும், கருவூர்க் கண்ணன் பரணனர் எனவும், கள்ளம் பாளர்ை எனவும் ஏடுகளில் காணப்பெறும். இவர் தந்தை பெயர் கண்ணன்; புல்லனச் என்ற இவர் பெயர் புலவளுர் என்பதன் மரூஉ வடிவாம் என்று கூறுவாரும் உளர். இவர் பிறந்த ஊர்கருவூர்; இக் கருவூர், சேரநாட்டு வஞ்சிக் கருவூராம்; இவர். தம்முடைய பாட்டொன்றில், தம்மூரை அடுத்து விளங்கிய சேரன் வஞ்சியினே, "ஒளிறுவேல் கோதை ஒம்பிக் காக்கும் வஞ்சி அன்ன என் வளநகர் '(அகம் : உசுஉ) ன்னப் பசராட்டி யுள்ளார். இவர் பாடிய பாடல்கள் ஐந்து, அகத்தில் மூன்று நற்றிணையில் இரண்டு. -

தன் மகள் தக்கான் ஒருவனுடன் சென்று விட்டாள் என்பதறிந்த தாய், தமர், தான்் விரும்பிய ஒருவனுக்குத் தன்னை மணம் செய்து தாராவழி நிற்குடி வந்த பெண் ஒருத்தி, தன் கற்பினைக் காத்துக்கொள்ளும் வழி, தமரை த்ேதுத் தலைவனூர் சென்று ம்ணந்து மாண்புறுங்தே என அறிந்த அறிவினளாதலின், அவள் தம்மைப் பிரிந்து போய்விட்டமைக்கு வருந்தாது, "அவள் அவன் மாட்டுக் கொண்டிருந்த அன்பின் மிகுதியை முன்னரே உணர்ந் திருப்பின், அவனே அவள் மணக்குமாறு கண்டு மகிழ்க் திருப்பேன்; அந்தோ அஃது இயலாமல் பேர்ய் விட்டதே,” என்றும், "அவள் நம் நகர் நீத்துப் போயினமைக்கு வருந்தேன் அவள் அரிய காட்டுவழியைக் கடந்து சென்று, கன்று வருந்தக் கறவை கொணரும் கருணையற்ற மறவர் மனேயில் தங்கி, அவள் அன்பன் அருகிருப்பவும் துயிலாது, ஆறலே கள்வர் எறுகளைக் கைப்பற்றுங்கால் எழுப்பும் திண்ணுமை ஒலிகேட்டு அஞ்சுவளே என்றே அஞ்சுகின் றேன்' என்றும் வருந்தினுள் எனப் பாடிப் பண்டைக் காலப் பண்புடைக் குடிவந்த தாயர் இயல்பினத் தெளிய, உணர்த்தியுள்ளார் நம் புலவர்: աr. ւ,- ii -3 -