சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் .. மேற்கே தெரிந்த அந்திமச் சூரியன் பானுமதிக்கும்" செல்வத்திற்கும், வேறு வேறு விதமாகத் தெரிந்தது. வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்ட பீட்ரூட் தோசைபோல் அவளுக்கும், ஆகாய வெளியை கண்களால் செதுக்கிய அவனுக்கு அது ஸ்படிக லிங்க உருவமாகவும் தோன்றியது. கைகளில் மண்ணைப் பிசைந்தபடி இருந்த செல்வம், அந்தக் கதிரவனையே மேல்நோக்கிப் பார்த்தான். அந்த ஆகாய விங்க வடிவில் சூரியன் குங்குமப் பொட்டாய் அவனுக்குத் தோன்றியது. எதிர் திசை கடலோரம் ஜோடி ஜோடிகளாய் பிரிந்த காதலர் கூட்டம் பாடி பாடிகளாய் ஒன்றிக் கிடந்தன. சற்று தொலைவான மணல் மேட்டில் சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி ஒன்றை நான்கு சொறி நாய்கள் வட்டமாய்ச் சூழ்ந்து கொண்டு, அதை நெருக்கிக்கொண்டு இருந்தன. காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி வாய்களை அகலப் படுத்திய நாய் பட்டாளத்தின் மையமாய் நின்ற வெள்ளைப் புள்ளிமான் போன்ற ஆட்டுக்குட்டியின் கூக்குரலும், நாய் களின் குரைச்சலும், கடலோர கள்ள நாயக-நாயகிகளுக்குப் பொதுவாகக் கேட்கவில்லை. கேட்ட ஒருசில ஜோடிகள், ஒல ஒலியும், உயிர் தின்னி ஒலியும் இரண்டறக் கலந்த
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/11
Appearance