உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் போயும் போயும் டைப்பிஸ்ட் வேலையான்னு கேட்டீங்களே. அதுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுத்தேன்!" பாஸ்கரன், அப்போதுதான் தன் எதிரே உட்கார்ந்திருப் பவனை, சிறிது மரியாதையாய் பார்த்தான். அவன் அழுத்தம் திருத்தமாய் பேசியதை, நம்ப முடியாதவள் போல் இப்படிப்பட்டவனால் எப்படிப் பேச முடியுது என்பதுபோல் சோபாவுக்குப் பின்னால் நின்ற மனைவியை அண்ணாந்து பார்த்தான். அவள் படுக்கறையில், ஒரு பரதேசிப் பையனிடம் பேச்சில தோத்துட்டீங்களேன்னு" சொல்லக் கூடாது என்பதற்காக பேசமுடியாமல் பேசினான். நான் சொல்றநை நீங்க தப்பாய் நினைத்தாலும், நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகணும். எம். ஏ., படிச்சுட்டு எத்தனையோ பேர் ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ்., என்று இருக்கும்போது, நீங்க டைப்பிஸ்டாய் இருக்கறது னால, ஒங்களுக்கு இன்டெலிஜென்ஸும், இன்ஷியேட்டிவ் யும் இருக்காதோ என்கிற சந்தேகத்துலதான் கேட்டேன்!' நீங்க கேட்டதை நான் தப்பா நினைக்கல. அதே சமயம், நான் ஏன் ஐ. ஏ. எஸ். எழுதல என்கிறதைச் சொல்லனும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல, ஹையஸ்ட் பீக், லாங்கஸ்ட் கான்டினென்ட். பிக்கஸ்ட் ஒசன் எது எதுன்னுதான் பொதுவா கேள்வி கேட்டுறாங்க, பப்ளிக் ஸ்கூல்ல போலித்தனமான ஆங்கில உச்சரிப்பில் நடமாடுறவங்களாலதான் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி ஐ. ஏ. எஸ். ஆக முடியும். இவங்களுக்கு குட்டாம்பட்டியைப் பத்தியோ, சட்டாம்பட்டியைப் பத்தியோ தெரியாது. அது தெரிந்திருக்க நியாயமுமில்ல. சர்வீஸ் கமிஷன்லயும் இவங்க செளகரியத்துக்குத் தக்கபடி தான் கேள்வி கேட்கிறாங்க. ' . இது ஒங்களுக்கு ஒரு நொண்டி சாக்குன்னு நினைக் கிறேன்."