உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் IT 'நொண்டி சாக்கோ... தொண்டாத சாக்கோ... எனக்கு இப்போ இருக்கிற டைப்பிஸ்ட் வேலை பிடிச்சிருக்கு. அதை மாத்திக்கிற உத்தேசமும் இல்ல." "அப்படின்னா நீங்க, இங்கே வந்திருக்கப்படாது!’’ பானுமதி, அண்ணா...' என்று அலறப்போனாள். செல்வத்தின் முகத்தில் புன்னகை புழுக்கமாகிக் கொண்டிருப் பதைப் பார்த்ததும், அண்ணனைக் கோபமாக முறைத்தாள். இதற்குள் மைதிலி, கணவனின் கையை வலுவாகத் திருகி அவனை உள்ளறைக்குள் இழுத்துக்கொண்டு போனாள். தணிகாசலம், எதையுமே கண்டுகொள்ளாதவர்போல், கையிரண்டையும் மார்போடு சேர்த்துக்கட்டி ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார். ஐந்து நிமிடம்வரை, ஈயாடவில்லை. பானுவுக்கு எதுவும் ஒடவில்லை. செல்வம் எழுத்தான். தணிகாசலம் அவனைப் பார்க்காமலே உட்கார்' என்றார். பானுமதி, உட்காருங்க... உட்காருங்க” என்று அறை குறையாக உளறினாள். தணிகாசலம், இப்போது அவனை நேருக்கு நேராய் பார்த்தார். புன்னகை மாறாமலே பேசினார். என் பையன் தங்கைமேல இருக்கிற அன்பாலதான் கேட்டான். தன்னோட மைத்துனன் சொத்துக்களை சம்பாதிக்காட்டாலும், அதைக் கட்டிக் காக்கிறவனாக வாவது இருக்கனுமே என்கிற கவலை அவனுக்கு. காரணம் நியாயமானதுதான். ஆனால், கவலைதான் மோசமானது.

  • ・ー2