உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக்

ஐ ஆம் ஹாப்பி...என் மகள் மேனாமினுக்கிப் பயல்கள் மேல் ஆசைப்படாமல், ஒரு நல்ல பையனை- தனக்குன்னு ஒரு சமுதாயக் கண்ணோட்டம் வைத் திருப்பவனை தேர்ந் தெடுத்ததுக்காக சந்தோஷப்படுகிறேன். இந்த வீட்டுக் குள்ளே, பேசப்போற விவகாரம் தெரிந்தும், இந்தமாதிரி கசங்கிய உடையில் வந்த நீ ஒரு கசங்காத பையன்னு புரிஞ்சுகிட்டேன். பட் என் மகனுக்கும் சம்மதம் வேணும்!"

பானு எழுந்தாள். செல்வத்தை நாணத்தோடும். அப்பாவை மகிழ்ச்சியோடும் பார்த்தபடியே வீட்டுக்குள் ஒடினாள். அண்ணனை மடக்க வேண்டுமானால், அண்ணிக்கு கண்ணி போட வேண்டும். அண்ணி...அண்ணி’’ என்று மனதுக்குள் கூவியபடியே ஒடியவள். எவரும் வரமாட்டார் கள் என்ற தைரியத்தில், மைதிலி கணவனை வாட்டி யெடுத்ததை காதுபடக் கேட்டாள். ஒங்களுக்கு மூளை இருக்கா? இந்தமாதிரிப் பையன் எங்கே தேடினாலும் கிடைக்காது. நல்லவேளை அசட்டுப் பையனைப் பார்த்துப் பிடிச்சிருக்சாள். வீம்பு பிடிச்சவனா இருந்தால் நாளைக்கே பாதி சொத்தைக் கேட்பான். பானு வுக்கு இப்படிப்பட்டவனே தேவை என்கிறதை மறந்துட்டீங். களா... இவன் பிடித்த இடத்துல பிள்ளையார் மாதிரி இருப்பான்!' • சரியான அழுமூஞ்சாய் இருக்காண்டி. சிடுமூஞ்சைவிட அழுமூஞ்சி எவ்வளவோ தேவல! இவள் புத்திக்கு இவன் போதும். இவள் ஆட்டத்துக்கும். பாட்டத்துக்கும் இப்படிப்பட்டவன்தான் தேவை. நமக்கும் இப்படிப்பட்டவன் கிடைத்தால்தான், சொத்து சுகம் சிதறாமல் இருக்கும். இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷ மாய் இருக்குது தெரியுமா? ஒங்கப்பா மாட்டேன்டுடப் போறாரோன்னு பயமா இருக்கு- சீ க் கி ர மா சரி சொல்லுங்க!”